Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…”கல்யாண வாய்ப்புகள் கைகூடும்”… கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் வந்து செல்லும்….!!!

சிம்ம ராசி அன்பர்களே…!!!  இன்று கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாளாக இருக்கும். கடல்தாண்டி வரும் தகவல் மகிழ்ச்சியை கொடுப்பதாகவே அமையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும் சுமாராக இருக்கும். ஆனால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவுகள் இருக்கும்.

சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை மகிழ்ச்சியாகவே காணப்படும். தனவரவு ஓரளவுதான் கிடைக்கும். கொஞ்சம் கடினமான உழைக்கக் கூடிய சூழல் இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே சிறியதாக வாக்குவாதங்கள் வந்து செல்லும். கூடுமானவரை கொஞ்சம் பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. இன்று மாணவ கண்மணிகளுக்கு கடினமான முயற்சி தேவை.

கூடுமானவரை படித்த பாடத்தை எழுதி பார்ப்பது சிறப்பு. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் கரும  தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் :  6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |