Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சிறப்பு ரயில் முன்பதிவு….. ஒரே நாளில் முடிந்தது…. கூடுதல் ரயிலுக்கு பயணிகள் வேண்டுகோள்….!!!!

நெல்லையில் இருந்து அம்பை, தென்காசி வழியாக இயக்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு ரயிலில் ஒரே நாளில் முன்பதிவு நிறைவடைந்தது. கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில் அந்த பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு செல்வதற்காக வசதியாக வருகிற 16-ஆம் தேதி அன்று நெல்லை -தாம்பரம் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் நெல்லை சந்திப்பிலிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு சேரன்மகாதேவி 7:25 மணிக்கும், அம்பைக்கு 7:40 மணிக்கும், பாவூர்சத்திரத்துக்கு 8:05 மணிக்கும் வந்து செல்கிறது. தென்காசி சந்திப்பு 8:30 மணிக்கு வந்து 8:40 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.

இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கிய ஒரே நாளில் முடிந்து விட்டது. எனவே இந்த வழி தடத்தில் அதாவது, நெல்லை சந்திப்பில் இருந்து அம்பை தென்காசி சந்திப்பு வழியாக தாம்பரத்திற்கு கூடுதலாக சிறப்பு ரயில் வேண்டும் என்று நெல்லை, தென்காசி மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் நிரந்தரமாக இந்த வழித்தடத்தில் வாராந்திர ரயில் தாமிரபரணி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Categories

Tech |