சென்னையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாலியல் புகார் மீதான நடவடிக்கை மற்றும் இடிக்கப்பட வேண்டிய பள்ளி கட்டடங்கள் விவரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தரமற்ற பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்து இடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.