Categories
மாநில செய்திகள்

“இனிமே இப்படி பண்ணிங்க நா ஜெயில் தான்”….  டி.ஜி.பி. கடும் எச்சரிக்கை….!!!

காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அவ்வபோது வதந்தியை பரப்பும் வகையில் பலரும் பலர் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இது தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இப்படி வதந்திகளை பரப்புவோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “பஸ் டிரைவர் ஒருவரை மர்மநபர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

இந்த வீடியோ கடந்த 2018ம் ஆண்டில் கேரள மாநிலம் மணக்காடு பகுதியில் நடந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்டது. ஆனால் இந்த சம்பவம் தமிழகத்தில் நடப்பது போல சித்தரித்து அரசுக்கும் காவல்துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் மர்ம நபர்கள் வீடியோவை பரப்பி வருகின்றனர். இது போன்ற செய்திகள் வீடியோவை வேண்டுமென்றே பரப்பும் சமூக விரோதிகள் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |