தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக நல்ல மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. ஆனால் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மழை குறைந்துவிட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் சில நாட்களாகவே பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கடலோர மாவட்டங்களிலும், 31 ஆம் தேதி கடலோர மாவட்டங்களில், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
Categories