T20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வீரராக கருதப்படும் டுவெயின் பிராவோ மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான டுவெயின் பிராவோ அந்த அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்கிறார் .தன்னுடைய துல்லியமான பந்து வீச்சினால் எதிரே உள்ள பேட்ஸ்மேனை மிரட்டுவதால் T 20கிரிக்கெட்டில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார் .ஆனால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தில் ஏற்பட்ட சில மோதல் காரணமாக அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
சமீப காலமாக வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அனுபவமிக்க வீரர்கள் மீண்டும் அணிக்குள் திரும்பும் விதமாக விதிமுறைகளை கிரிக்கெட் வாரியம் மாற்றி அமைத்தது. இதனால் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில் மற்றும் பொல்லார்டு போன்றவர்கள் மீண்டும் அணிக்குள் திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் T20 அணிக்குள் மறுபடியும் திரும்பியுள்ளேன் என பிராவோ அறிவித்துள்ளார். அதே நேரத்தில் T 20 கிரிக்கெட்டை தவிர மற்ற வகையான டெஸ்ட் மற்றும் ஓடிஐ போட்டிகளில் அணிக்காக விளையாட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிராவோ கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மீண்டும் சர்வதேச T 20 கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவதை ரசிகர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.நான் தேர்வுசெய்யப்பட்டால், T 20 கிரிக்கெட்டிற்காக முழு வீச்சில் களம் இறங்குவேன். அதுமட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்,ரசிகர்கள் மற்றும் இளைஞர்களுடன் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியாகயும் உற்சாகமாகயும் இருக்கும் ’’ என்று தெரிவித்துள்ளார்.