Categories
தேசிய செய்திகள்

120 மணி நேர மெகா ரெய்டு…. கட்டி கட்டியாக தங்கம் பறிமுதல்…. வசமாக சிக்கிய பிரபலம்….!!!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பியூஸ் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாசனைப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் அதிபராக உள்ளார். இவர் வீட்டில் கடந்த வாரத்தில் வருமானவரித்துறை மற்றும் ஜிஎஸ்டி தலைமை இயக்குனரக அதிகாரிகள், ஜிஎஸ்டி புலானாய்வு துறை ஆகியவை இணைந்து ரெய்டு நடத்தினர். அப்போது ரொக்கமாகவே ரூ.257 கோடி வைத்திருந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது. கனவ்ஜியில் உள்ள பியூஷ் ஜெயினின் பரம்பரை பங்களாவில் போலீசார் 18 லாக்கர்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். இதற்கு 500 சாவிகளும் புழக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பியூஷ் ஜெயினின் வீட்டுப் பணியாள் ஆஜ் தக் தொலைக்காட்சிக்கு டிசம்பர் 22ம் தேதி கூறியது, ரெய்டு வந்தபோது பியூஷ் ஜெயின் டெல்லியில் இருந்தார்.
இவர் தந்தையின் சிகிச்சைக்காக ஒட்டுமொத்த குடும்பமும் டெல்லியில் இருந்தது. வீட்டில் பியூஷ் ஜெயினின் 2 மகன்கள் மட்டும்தான் இருந்தனர். விசாரணைக்கு அதிகாரிகள் அழைத்த போது அவர்கள் கான்பூர் திரும்பினர் என்று கூறினார்கள். அதனை தொடர்ந்து கான்பூரின் இத்தர்வாலியில் வாசனைப்பொருட்கள் விற்கும் இடத்திற்கு பெயர் பெற்ற இடத்தில்தான் பியூஷ் ஜெயின் தன் வர்த்தகத்தை நடத்தி வருகிறார். இந்த ரெய்டில் கணக்கில் வராத சந்தன எண்ணெய், மற்றும் பிற வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டது . இதுதான் வரலாற்றில் மிகப்பெரிய ரெய்டு என்று மத்திய மறைமுக வரி  தலைவர் விவேக் ஜோஹ்ரி தெரிவித்துள்ளார்.  இதையடுத்து மத்திய ஜிஎஸ்டி வரி விதிப்புச் சட்டத்தின் கீழ்  வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். மேலும் 120 மணி நேர விசாரணைக்குப் பிறகு பியூஷ் ஜெயின் கைது செய்யப்பட்டார்.

Categories

Tech |