மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாத ஊதியத்துடன் சேர்த்து அகவிலைப்படி (DA) உள்ளிட்ட சில கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அந்த அடிப்படையில் கொரோனவால் இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த DA சலுகைகளை 31 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசானது முடிவு செய்துள்ளது. இந்த தொகை வரும் புத்தாண்டுக்கு முன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு பே மேட்ரிக்ஸின் அடிப்படையில் தான் சம்பளம் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது 7-வது சம்பள கமிஷன் வந்ததில் இருந்து, மத்திய அரசு ஊழியர்களின் நிலை தர ஊதியத்தால் நிர்ணயிக்கப்படாமல் சம்பள மேட்ரிக்ஸ் மூலமாக நிர்ணயிக்கப்படுகிறது. இதன் மூலமாக ஊழியர்கள் தங்கள் சம்பள அளவை சரிபார்க்க முடியும். மேலும் வரும் காலத்தில் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். இது ஊழியர்கள் எதிர்காலத்தில் எவ்வளவு லாபம் பெறப் போகிறார்கள் என்பதையும் ஆரம்பக்கட்டத்திலேயே தெரிந்து கொள்ள அனுமதிக்கிறது. தற்போது ஊழியர்களின் ஏழாவது ஊதியத்தின் கீழ் பே மேட்ரிக்ஸ் நிலை 3-லிருந்து அடிப்படை சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது. அந்த அடைப்படையில் ஊழியர்களின் அடிப்படை ஊதிய அமைப்பு 21,700 ரூபாயில் இருந்து தொடங்கி 40 அதிகரிப்புடன் ரூ.69,100 வரை செல்கிறது.
ஊதிய அதிகரிப்பு
லெவல் 3-ன் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளமானது ரூ.21,700 ஆக உள்ள நிலையில் அந்த தொகை பே மேட்ரிக்ஸ் கீழ் வந்தால், அவருடைய சம்பளம் அதிகரிக்கலாம். அதன்படி பணியாளரின் அகவிலைப்படி 31 சதவீதத்தில் 6,727 ரூ வரை உயரும். மேலும் வீட்டு வாடகை கொடுப்பனவு 27% அதிகரித்து 5,859 ரூபாய் ஆகவும், பயணப்படி நகர வாரியாக 4,716 ரூபாய் ஆகவும் உயரும். அதாவது ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் மாதம் 39,002 ரூபாய் வருமானம் கிடைக்கும்.
அட்டவணையின் படி கணக்கீடு
இந்த ஊதிய உயர்வானது அட்டவணையின் படி கணக்கிடப்படுகிறது. சிவில் ஊழியர்கள், பாதுகாப்புப் படைகள் மற்றும் ராணுவ நர்சிங் சேவை போன்றவற்றுக்குள் தனி ஊதிய மேட்ரிக்ஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. பரிந்துரைகளின்படி ஒவ்வொரு பணியாளரும் பயனடையும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
7வது சம்பள கமிஷன் பே மேட்ரிக்ஸின் பலன்கள்
1. 7-வது பே மேட்ரிக்ஸ் கிரேடு பே மற்றும் பே பேண்ட் போன்றவற்றை இணைக்க உதவுகிறது.
2. பே மேட்ரிக்ஸ் நிலையானது வெவ்வேறு பே பேண்டுகளுக்கு இடையில் உள்ள இடைவெளியை குறைக்கிறது.
3. 7-வது சம்பள கமிஷன் மேட்ரிக்ஸ் திருத்தப்பட்ட ஊதியத்தை நிர்ணயம் செய்வதை எளிதாக்குகிறது.
4. இதற்கான கணக்கீடு தேவை இல்லை.
5. பே மேட்ரிக்ஸ் அட்டவணையை எளிதாகக் கணக்கிடலாம்.
6. இது பிழையற்ற கட்டண முறையைக் காட்டுகிறது குறிப்பிடத்தக்கது.