Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு…”வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள்”… வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும்…!!!

துலாம் ராசி அன்பர்களே..!!  இன்று உங்களுக்கு புகழ் கூடும் நாளாக இருக்கும். புதிய முயற்சியில் வெற்றி கிட்டும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அதுமட்டுமில்லாமல் ஆதாயமும் உங்களை தேடி வரக்கூடும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அதுமட்டுமில்லாமல் இன்று மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாகவே செய்து வெற்றியும் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் மந்த நிலை கொஞ்சம் மாறும்.

வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது மட்டும் நன்மையை கொடுக்கும். அதுபோலவே வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்ல வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கூட கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். பணப்பரிவர்த்தனையில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். யாருக்குமே இன்றைக்கு நீங்கள் ஜாமீன் கையெழுத்து மட்டும் தயவு செய்து கொடுக்காதீர்கள். அதுபோலவேதான் வாக்குறுதிகளையும் கொடுக்காதீர்கள்.

இன்று மாணவர்கள் கொஞ்சம் கடினமாக உழையுங்கள். படித்த பாடத்தை எழுதியும் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |