Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவுத் துறையில் இனி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் இதுவரை இல்லாத அளவிற்கு பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஆவணி எழுத்தர் நல நிதியத்திற்கு பணம் சேர்ப்பதற்காக பதிவுக்காக கொண்டு வரப்படும் ஒவ்வொரு ஆவணத்திற்கும் 10 ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆவண எழுத்தர் நல நிதியம் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆவண எழுத்தர் நல நிதியத்தில் விருப்பத்தின் பெயரில் உறுப்பினராக சேர நுழைவு கட்டணமாக 1000 ரூபாய் வசூலிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு செய்யப்படும் ஆவணம் ஒன்றுக்கு தலா 10 ரூபாய் வீதம் பதிவுக்கு வருபவரிடம் ஆவண எழுத்தர் நல நித்தியத்திற்காக வசூல் செய்யப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் நல உதவிகளை பெறுவதற்கும் தகுதிகள் மற்றும் நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |