நாடு முழுவதும் கொரொனோ தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் அரசின் முழு முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்தி ஆர்வத்தினாலும், தொறக படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது.
தற்போது தமிழகத்திலும் இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் எஸ் ஜீன் மாற்றம் அடைந்த கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 51- ஆக அதிகரித்துள்ளது.