ஒமிக்ரோன் வைரஸ் காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 11 ஆயிரத்து 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் கால் பதித்து விட்டது. இதனிடையில் ஒமிக்ரான் அச்சுறுத்தலால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி ஒமிக்ரான் வைரஸ் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இன்று வரை 11 ஆயிரத்து 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் புத்தாண்டு கொண்டாட சொந்த நாடுகளுக்கு திரும்ப திட்டமிட்டு இருந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.