நெல்லை டவுன் சாப்ட்டர் பள்ளியில் கடந்த 17ஆம் தேதி இடைவேளையின்போது கழிப்பறை சுற்று சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 6 மாணவர்கள் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறக் கூடாது என்பதற்காக இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பழைய கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பழைய கட்டிடங்கள் உள்ள 1,600 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.