Categories
தேனி மாவட்ட செய்திகள்

கட்சியினருக்குள் ஏற்பட்ட மோதல்…. பார்வர்டு பிளாக் கட்சியினர் மீது நடவடிக்கை…. 9 பேர் கைது….!!

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பார்வர்டு பிளாக் கட்சியினர் 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் மாவட்ட பொது செயலாளர் எஸ்.ஆர்.தமிழன் நினைவு தினத்தன்று, ரத்தினம் நகரில் உள்ள அவரது சமாதியில் பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அப்போது அங்கு அஞ்சலி செலுத்த வந்த தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் இருக்கும் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தேனி புறவழிச்சாலையில் சிலர் பட்டா கத்தியுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் 6 கார் கண்ணாடி உடைக்கப்பட்டதுள்ளது.

இது குறித்து இரு தரப்பினரும் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகளான தேனியை சேர்ந்த கோட்டைசாமி, போடியை சேர்ந்த குமரேசன், கெங்குவார்பட்டியை சேர்ந்த பிரபாகரன், ஜெயமங்கலத்தை சேர்ந்த சோலைதேவன், திண்டுக்கல்லை சேர்ந்த செல்வம், சரவணகுமார், வாடிபட்டியை சேர்ந்த அன்னக்கொடி, ஆத்தூரை சேர்ந்த சிவா, சின்னாளப்பட்டி சேர்ந்த சதன்குமார் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |