Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கந்துவட்டி கொடுமை…!! வீட்டை இழந்த நபர்…!!!

மதுரையில் கந்து வட்டி செலுத்த வில்லை என்று கூறி குடியிருந்த வீட்டை இடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மதுரை அருகே தத்தநேரியை சேர்ந்த குமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் கடந்த 2014 ஆம் ஆண்டு கடனாக 2 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். இந்நிலையில் வாங்கிய கடனுக்கு வட்டியாகவே 3 லட்சம் ரூபாய் செலுத்திய குமார் தொடர்ந்து கடனை செலுத்த முடியவில்லை என்று நாகராஜிடம் கூறியுள்ளார். இன்னும் 7 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று கூறிய நாகராஜ், அதற்குபதிலாக அவர் குடியிருக்கும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த குமார் கடந்த 11ஆம் தேதி வெளியூர் சென்றிருந்த நிலையில்,அவரது மனைவியும் அருகில் இருந்த ரேஷன் கடைக்கு சென்றுள்ளார்.

Image result for கந்துவட்டி கொடுமை

அப்போது அங்கு நாகராஜ்  தனது ஆட்களுடன் வந்து குமாரின் வீட்டை இடித்துள்ளார். இதுகுறித்து அக்கபக்கத்தினர் கேட்கும் போது தன்னிடம் நீதிமன்ற உத்தரவு இருப்பதாக கூறி வீடு முழுவதையும் இடித்துள்ளார். இதனை அடுத்து குமார் குடும்பத்தார் அளித்த புகாரின் பெயரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவஆசீர்வாததை நேரில் சந்தித்து குமார் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் நாகராஜ் உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |