Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க செய்தால் ரத்தம்…. அதே நீங்க பண்ணா தக்காளி சட்னியா….. ஓபிஎஸ் அதிரடி ட்விட்….!!!

விவசாய இணைப்புகளில் மின்மீட்டர் பொருத்தும் பணி விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முந்தய எதிர்க்கட்சித் தலைவர் இன்று தமிழ்நாட்டின் முதல்வராக உள்ள நிலையில் திமுக எதை எல்லாம் எதிர்த்ததோ, அதெல்லாம் செயல்பாட்டிற்கு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 1 லட்சம் விவசாய மின் இணைப்புகளை வழங்கி பேசிய தமிழக முதல்வர், சில புள்ளி விவரங்களை குறிப்பிட்டு, 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கியதை, ஒரு மிகப்பெரிய சாதனை போன்று சித்தரித்து. இதேபோன்ற அரசு இந்தியாவிலேயே இல்லை என்று பேசினார்.

ஆனால் இந்த புதிய மின் இணைப்புகளில் மீட்டர் பொருத்த படுவதைப் குறித்து வாய் திறக்கவில்லை. தற்போது அந்த மின் இணைப்புகளில் எல்லாம் மீட்டர் பொருத்தும் பணியானது நடந்து வருவதாகவும், அதுமட்டுமின்றி இதுவரை மீட்டர் இல்லாத இணைப்புகளிலும் மீட்டர் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றது. இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரி கூறியபோது, விவசாயத்துக்கு இலவசமாக தொடர்ந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும்.

மேலும் கட்டணம் வசூலிக்க மீட்டர் பொருந்தவில்லை எனவும் எவ்வளவு மின் பயன்பாடு எவ்வளவு உள்ளது என்பதை அறியத்தான் எனவும் தெரிவித்துள்ளார். இதேதான் புரட்சி தலைவி அம்மா அவர்கள் கூறினார்கள். மேலும் அதிமுகவும் கூறியது. அப்போது அதை விமர்சனம் செய்தவர்கள் இப்போது அதை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே அதிமுக மேற்கொண்டால் அது ரத்தம், திமுக செய்தால் தக்காளி சட்டினி என்ற நகைச்சுவை தான் நினைவுக்கு வருகிறது. இதனிடையில் மீட்டர் பொருத்த எந்த ஒரு புதிய மின் இணைப்பு வழங்க கூடாது.

இதுவரையிலும் மீட்டர் இல்லாத இணைப்புகளிலும் மீட்டர் பொருத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு இணங்க எல்லா இணைப்புகளிலும், மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலமாக  எதிர்காலத்தில் கட்டணம் வசூலிப்பதற்காகத்தான் மீட்டர் பொருத்தப்படுகிறது என்ற அச்சம் விவசாயிகளிடையே நிலவுகிறது. ஆட்சியில் இருக்கையில் ஒரு பேச்சு, ஆட்சியில் இல்லாதபோது ஒரு பேச்சு என்று இல்லாமல் விவசாயிகளின் அச்சத்தை நீக்கும் விதமாக ,மீட்டர் பொருத்தும் பணியை உடனடியாக நிறுத்தவேண்டும். மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வர் அவர்களை அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |