கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் புகழ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவின்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திவின்குமார் தனது நண்பர்களான அஸ்வின் யுவராஜ் ஆகியோருடன் புண்ணியகோட்டி நகரில் இருக்கும் காலி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்றுள்ளான். இதனை அடுத்து அங்கிருந்த பாழடைந்த கிணற்றுக்குள் நீந்திக் கொண்டிருந்த மீனை சிறுவர்கள் எட்டிப்பார்த்த போது எதிர்பாராதவிதமாக திவின்குமார் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அஸ்வின் மற்றும் யுவராஜ் ஆகிய இருவரும் குமாரை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்தனர்.
அதன் பின் சிறுவர்களின் சத்தம் கேட்டு அருகில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த இளைஞர்கள் யுவராஜ் மற்றும் அஸ்வினை பத்திரமாக காப்பாற்றினர். ஆனால் திவின் குமாரை காப்பாற்ற இயலவில்லை. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 மணிநேர போராட்டத்திற்கு பிறகு திவின் குமாரின். சடலத்தை மீட்டனர் அதன்பின் காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மற்றும் மணிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.