Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு இராசிக்கு…”முக்கிய புள்ளிகளின் சந்திப்பும் உண்டாகும்”…கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி இருக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே…!! இன்று உங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். முக்கிய புள்ளிகளின் சந்திப்பும் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நாட்டுப்பற்று மிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டு காரியம் விரைவாக நடைபெறும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அதன்மூலம் அவர்களின் நல்ல மதிப்பையும் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி இருக்கும்.

பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அன்பு பெருகும் நாளாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று மிக முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டியது வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக ஈடுபட வேண்டும். மற்றவர்களுக்கு பஞ்சாயத்துக்கள் செய்வது வாக்குறுதிகள் கொடுப்பது போன்றவை இன்று நீங்கள் தவிர்க்க வேண்டும்.

இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டும். படித்த பாடத்தை எழுதிப் பார்ப்பது சிறப்பை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு சென்றால் சிறப்பாக இருக்கும், முன்னேற்றம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |