Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு…”உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்”… சுபகாரிய பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும்…!!

மகர ராசி அன்பர்களே…!!!  இன்று உங்களுக்கு மகிழ்ச்சி கூடும் நாள் ஆக இருக்கும். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாக இருக்கும். சுபகாரிய பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். இன்று வழக்குகளை தள்ளிப் போடுவதும், சமாதான முறையில் பேசி தீர்த்துக் கொள்வதும் நல்லது.

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றியும் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் எப்பொழுதும் போலவே மகிழ்ச்சி நிலவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல், இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள தரும தோஷங்கள் அனைத்தும் நீங்கி, செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |