Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென விழுந்த ராட்சத மரம்…. சேதமான வாகனங்கள்…. ஊழியர்களின் தீவிர பணி…!!

சாலையில் விழுந்த ராட்சத மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திபுரம் ராமர் கோவில் வீதியில் வாகை மரம் ஒன்று உள்ளது. இந்நிலையில் 30 ஆண்டுகள் பழமையான ராட்சத மரம் வேரோடு சாய்ந்து விழுந்துவிட்டது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் சேதமடைந்தது.

இதில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |