Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்க சென்ற வாலிபர்கள்…. நொடியில் பறிபோன உயிர்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் சாந்தன்பாறா பகுதியில் கூலி தொழிலாளியான விக்கி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அமல் என்ற மகன் இருந்துள்ளார். இவர் இடுக்கியில் இருக்கும் தனியார் கல்லூரியில் 3-ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அமல் தனது நண்பர்களான பாதுஷா, ரமேஷ், பிரதீப் ஆகியோருடன் புதிதாக செல்போன் வாங்குவதற்காக கோவைக்கு புறப்பட்டுள்ளார். இதில் அமல் மற்றும் பிரதீப் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், பாதுஷா மற்றும் ரமேஷ் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் அமல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பிரதீப் மற்றும் அமல் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அமல் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் பிரதீப் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |