Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிச-31-க்கு பின்…. மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கொரோனா தொற்றி இருந்து உருமாறிய  ஒமிக்ரான் வைரஸ் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான சுப்பிரமணியன் அவர்கள் சென்னை அரும்பாக்கத்திலுள்ள சித்தா அரசு மருத்துவமனையில், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில், ‘டேட்டா செல்’ என்ற புதிய பிரிவை துவக்கி வைத்தார். இதனையடுத்து சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “ஓமியோபதி, சித்தா, யுனானி ஆகிய மருத்துவ முறைகளில் கொரோனா முதல் மற்றும் 2-ம் அலைகளின் போது சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதேபோன்று தற்போது பரவி வரும் ஒமிக்ரான் வகை தொற்றுக்கு இந்த முறைகளில் சிகிச்சை அளிக்கப்படும். தமிழகம் முழுவதும் 77 இடங்களில் இந்திய மருத்துவ முறைக்கான கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பாக 1700 படுக்கைகள் நிரந்தரமாக அமைக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக 6700 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒமிக்ரான் வகை தொற்றினை உறுதி செய்வதற்கான பரிசோதனை மையம் தமிழகத்தில் இருக்கிறது. ஆனால் அதற்குரிய அனுமதியை மத்திய அரசு வழங்கவில்லை. இதன் காரணமாக பரிசோதனை முடிவுகள் வருவதற்கு மிகவும் தாமதம் ஆகிறது.

தமிழகத்தில் 15 -18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும். பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறித்து மத்திய அரசு அறிவித்த பின் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் வரும் டிசம்பர் 31-ம் தேதி முதல்வர் முக.ஸ்டாலின் ஆலோசனைக்கு பின் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக அறிவிக்கப்படும்” என்று அவர் அறிவித்துள்ளார். தற்போது ஒமிக்ரான் வகை தொற்று அதிவேகமாக தமிழகத்தில் பரவி வரும் நிலையில் இரவு முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்படுமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.

Categories

Tech |