Categories
உலக செய்திகள்

என்ன ஆனாங்கன்னு தெரியல….? ரொம்ப நாளாச்சு….. மாயமான புலம்பெயர்ந்தவர்களை தேடும் பணி தீவிரம்…..!!

அமெரிக்காவில் இருக்கும் மெக்சிகோ பாலைவனத்தில் புலம்பெயர்ந்த மக்கள் 12 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.

மெக்சிகோவின் வடக்குப் பகுதியில் இருக்கும் கோயாமே நகரிலிருந்து, புலம்பெயர்ந்த மக்கள் 12 பேர், சிஹுவாஹுவான் என்னும் பாலைவனத்தின் வழியே வெளியேறியிருக்கிறார்கள். அவர்கள் டெக்சாஸ் மாகாணத்தின் வழியே அமெரிக்க நாட்டை கடந்து செல்ல தீர்மானித்து சென்றிருக்கிறார்கள்.

அதில் 14 வயது சிறுவனும் இருந்திருக்கிறார்.  அச்சிறுவன், எல்லையில் இருக்கும் தன் குடும்பத்தாருடன் இணைவதற்காக இவர்களுடன் பயணித்திருக்கிறார். இவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி அன்று புறப்பட்டிருக்கிறார்கள். அதில், சேவியர் ரிக்கார்டோ என்ற நபர் தன் மனைவியிடம் தொலைபேசியில் பேசியபோது, “கடத்தல்காரர்களுக்கு 1200 அமெரிக்க டாலர்களை கொடுத்திருப்பதாகவும் அவர்களின் உதவியுடன் டெக்ஸாஸை அடைந்து விடுவோம் என்று கூறியிருக்கிறார்.

அது தான், அவர் இறுதியாக பேசியது. அதன் பின்பு அவர்களை காணவில்லை. அதிலிருந்த சிறுவன் மட்டும் பாதுகாப்பாக பாலைவனத்தை கடந்து எல்லையை வந்தடைந்து விட்டார்.  மற்றவர்களின் நிலை என்ன ஆனது? என்பது தெரியவில்லை. இது தொடர்பில் அச்சிறுவன் தெரிவித்ததாவது, “பாலைவனத்திற்கு இடையில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வந்து, எங்களை தடுத்து நிறுத்தினார்கள்.

என்னை மட்டும் விட்டுவிட்டு, மற்ற அனைவரையும் அவர்கள் அழைத்து சென்றனர் என்று கூறியிருக்கிறார். எனவே, மாயமானவர்களை, ஒரு மாதமாக தொடர்ந்து தேடி வந்தனர். எந்த பயனும் இல்லாதததால், அவர்களை தேடும் முயற்சியை கைவிட்டனர். எனினும் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அவர்களை தேடுவதில் தீவிரமாக ஈடுபட்டனர்.

எனவே, மீண்டும் அவர்களை தேடும் பணி நடக்கிறது. ஹெலிகாப்டர் மூலமாக வான்வெளி தேடுதல் நடத்த மெக்சிகோவின் ராணுவம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது, மெக்சிகோவில் மனிதர்களை கடத்துவது ஒரு பெரும் வியாபாரமாக மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Categories

Tech |