Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன இராசிக்கு…”விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும்”……கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருங்கள்…….!!!

மீன ராசி அன்பர்களே…!!!  இன்று விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் இன்று விரிவடையும். இடமாற்றம் வீடுமாற்றம் செய்யலாம் என்ற சிந்தனை மேலோங்கும். இன்று எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும். கொடுக்கல்-வாங்கலில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அரசியல் துறையில் உள்ளவர்கள் இன்று கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வீண் செலவுகள், மற்றவர்களால் மனக்கஷ்டம் ஏற்படும். இன்று பொறுமையை கையாளுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.

அது போலவே யாருக்கும் பணம் கைமாற்றாக வாங்கி கொடுக்காதீர்கள். அந்த பொறுப்பை மட்டும் தயவு செய்து ஏற்றுக் கொள்ளாதீர்கள். இன்று தெய்வீக நம்பிக்கை கொஞ்சம் கூடும். வெளிநபர்கள் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். இன்று தனவரவு கிடைப்பதில் மட்டும் கொஞ்சம் காலதாமதம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மாணவக் கண்மணிகள் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கரும தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான   அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் :ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்

 

Categories

Tech |