Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…. ஆசிரியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பாடவேளைகள் உள்ளன. தற்போது பள்ளி மாணவர்களின் புத்தகம் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் நூலக பாடவேளை கட்டாயம் உருவாக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தினசரி நாளிதழ் வாசிக்கவும் மாணவர்களுக்கு தனி நேரம் ஒதுக்கித் தருமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து பள்ளிகளிலும் நூலகம் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் சில பள்ளிகளில் நூலக பாட வேலைகளுக்கு முக்கியத்துவம் வழங்காமல் பயன்படுத்தப்படாமல் உள்ளது. அதனால் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. எனவே மாணவர்களுக்கு வாரம் ஒரு முறையாவது நூலக பாடவேளை ஒதுக்க வேண்டும் மற்றும் தனி அறை ஒதுக்கீடு செய்து ஒரு புத்தகத்தையாவது வாசிக்க தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

பள்ளிகளில் நூலக நேரம் மற்றும் காலை மாலை மட்டும் அல்லாமல் உணவு இடைவேளை நேரங்களில் திறந்திருக்க வேண்டும். மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்கள் தினசரி படிக்கும் புத்தகங்களில் இருந்து கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல் மற்றும் நூல் அறிமுகம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும் 20-ஆம் தேதிக்குள் மாவட்ட அளவிலான போட்டி நடத்தப்பட வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்களை நூலக பயணம் அழைத்துச் செல்லலாம். மாநில அளவில் ஆண்டுக்கு மூன்று முறை போட்டிகள் நடத்தி 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக பள்ளி மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |