Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க உணவு வழங்கல் துறை உதவி ஆணையர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் மலிவான விலையில் பொருள்களை வாங்கி பயனடைகின்றனர். காடுகளில் 5 வகையாக உள்ளது. அதன் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் ரேசன் கடைகள் மூலம் குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரண தொகையாக 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதையடுத்து தமிழகத்தில் பலர் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஆன்லைன் வாயிலாகவும், வீட்டிலிருந்தபடியே ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் உணவு வழங்கல் துறை அமைச்சர் புதிய அரசன் ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் வழங்க ஆணையிட்டுள்ளார். அதன்பின்னர் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி நிறைவு பெற்றது. ஆனாலும் இன்னும் சிலருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை.

தற்போது அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ள நிலையில், பரிசு தொகுப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் புதிய ரேஷன் கார்டு கேட்டு பலர் விண்ணப்பித்து வருகின்றனர். அதில் தகுதியான நபர்களுக்கு புதிய கார்டு வழங்கும் உணவு வழங்கல் துறை உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் பொங்கல் பண்டிகையையொட்டி விரைவில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நாளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசனை நடத்த உள்ளார்.

Categories

Tech |