Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! விரைவில் பத்திரபதிவில்…. மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை…!!!!

தமிழகத்தில் ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வரிசைப்படி பத்திரப்பதிவு நடக்கிறது. இதில் முந்தைய நபர்களின் பதிவு முடியும் வரை வயதானவர்கள் காத்திருக்க வேண்டிய உள்ளது. எனவே அவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதனை கவனத்தில் கொண்டு வயதானவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக தமிழக அரசு, டோக்கன் வரிசைமுறை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்றும், அதேநேரத்தில் விற்பது வாங்குவது யாராவது ஒருவர் 70 வயதைக் கடந்தவர் என்றால் டோக்கன் எதுவானாலும் உடனடியாக பதிவுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து சார்பாதிவாளர்கள் கூறுகையில், மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்கி இருப்பது நல்லதுதான். அதேபோல மாற்றுத்திறனாளிகள், அரசின் முக்கிய சேவைத்துறை பணியாளர்களுக்கும் இதில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம். விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |