Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. அதிர்ச்சியில் பெற்றோர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை கிராமத்தில் 10-ஆம்  வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும்  குழந்தைவேல் என்பவர் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில்  அவரது  வீட்டிற்குள் நுழைந்துவிடடார். அதன்பின்னர்    குழந்தைவேல் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். மேலும்  இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என குழந்தைவேல் சிறுமியை  மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து  சிறுமி தனது பெற்றோரிடம்  நடந்தவற்றைக் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தைவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |