பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் கடந்த 20ஆம் தேதி அன்று விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரயில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் தற்போது மாநிலம் முழுவதும் 7 பிரிவுகளாக பரவியுள்ளது. இதனால் பஞ்சாப் மற்றும் ஜம்முவை இணைக்கும் 60க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளை ரத்து செய்ய அல்லது திருப்பி விட இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதில் ரத்து செய்யப்பட்ட ரயில்களில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவிக்கு செல்லம் 3 சிறப்பு ரயில்கள் உள்ளது. மேலும் பல ரயில்கள் குறுகிய தூரத்தில் இயக்கப்பட்டு வருகின்றனர். 16 ரயில்கள் பிற ரயில்கள் நிலையங்களிலிருந்து புறப்படுகின்றன என்றும் 13 ரயில்கள் செல்லும் இடத்திற்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.