Categories
தேசிய செய்திகள்

BREAKING : “பூஸ்டர் டோஸ் “….. மருத்துச்சான்று கட்டாயமல்ல…. மத்திய அரசு அதிரடி….!!!!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு மருத்துவச் சான்று கட்டாயமல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் ஆயுதமாக இருந்தது தடுப்பூசிகள் மட்டும் தான். இதனால் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தி விட்ட நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

தற்போது 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், ஜனவரி 10ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்கள் முதியோர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்றும் பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கலந்து செலுத்தக் கூடாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு மருத்துவ சான்று கட்டாயமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனை பெற்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.  கட்டணம் செலுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ள விரும்புவோர் தனியார் மருத்துவமனையை அணுகலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |