Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசை எதிர்த்து….. அடுத்த வருடம் போராட்டம்…. டிஆர்எஸ் அதிரடி அறிவிப்பு….!!

தெலுங்கானா மாநிலம் ராஷ்டிரிய சமிதி கட்சி 2022ஆம் ஆண்டு மோடி அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஒவ்வொரு பிரச்சனையாக முன்வைத்து மாதம் தோறும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே அரிசி கொள்முதல் குறித்து மத்திய அரசுக்கும் டிஆர்எஸ் கட்சிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 3 முறை போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அடுத்த ஆண்டு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாநிலத்திற்கான மத்திய நிதி ஒதுக்கீட்டில் நிலவும் பாரபட்சம், பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாது மற்றும் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கையில் எடுக்கப் போவதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சில போராட்டங்களில் கட்சித் தலைவர் கே. சந்திரசேகரராவ் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் இந்திரா பாரிசில் நடைபெற்ற போராட்டத்தில் சந்திரசேகரராவ் கலந்து கொண்டார். இந்தப் போராட்டம் 2014 ஆம் ஆண்டு முதல்வர் பதவிக்கு வந்த பிறகு அவர் கலந்து கொண்ட முதல் போராட்டமாகும்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள முதல் போராட்டம் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நடத்தப்படும். இந்த பிரச்சினை குறித்து ஏற்கனவே போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அனைத்து பிற்பட்டோர் அமைப்புகளுக்கும் டிஆர்எஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதையும் கருத்தில் கொண்டு டிஆர்எஸ் இந்த போராட்டங்களை நடத்துகிறது என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அகில இந்திய அளவில் புதிய கூட்டணியை அமைக்கும் வேலையில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தென்னகத்தில் புதிய கூட்டணி உருவாக்க டிஆர்எஸ் முடிவு செய்துள்ளது.

Categories

Tech |