இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 3 வது உலக கோப்பை போட்டியில் மிக சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கான முதல் கோப்பையை கைப்பற்றியது. வரலாற்றில் மறக்க முடியாத இந்த நிகழ்வு பாலிவுட்டில் 83 என்ற பெயரில் படமாக்கப்பட்டு உள்ளது. இந்த படம் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கப்பட்டு கபீர் கான் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் அஸ்வின் மிஸ்ரா ஒளிப்பதிவில், ஜூலியஸ் பக்கியம் இசை அமைத்துள்ளனர். இதில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் கபில் தேவின் மனைவி கதாபாத்திர தீபிகா படுகோன் நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜீவா தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி என்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மனதில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் பட குழுவினரைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “வாவ் என்ன திரைப்படம் அற்புதமான படைப்பு” என்று தயாரிப்பாளர்கள், இயக்குனர், கபில்தேவ், ரன்வீர் சிங் மற்றும் ஜீவா ஆகிய ஒட்டுமொத்த படக்குழுவினரை சேர்த்து பாராட்டியுள்ளார்.