பீட்ரூட் பிரியாணி
தேவையான பொருள்கள்
பாஸ்மதி அரிசி- ஒரு கப்
வெங்காயம்-1
தக்காளி-1
பிரியாணிஇலை-1
பச்சை மிளகாய்- ஒன்று
இஞ்சி பூண்டு விழுது -ஒரு தேக்கரண்டி
பட்டை கிராம்பு ஏலக்காய் தலா -2
சோம்பு -அரை கரண்டி
பிரியாணி மசாலா தூள் சாம்பார் மசாலா தூள்- ஒரு தேக்கரண்டி
புதினா கொத்தமல்லி தழை -ஒரு கைப்பிடி
தயிர்- 2 மேசைக்கரண்டி
நெய்யில்- வறுத்த முந்திரி பருப்பு
எண்ணெய் வெண்ணெய் -ஒரு மேசைக்கரண்டி
உப்பு -தேவைக்கேற்ப
செய்முறை
வெங்காயம் பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும் அரிசியை களைந்து ஊறவைக்கவும் தக்காளியுடன் கொத்தமல்லித்தழை புதினா சேர்த்து அரைத்து வைக்கவும் பீட்ரூட்டை துருவிக் கொள்ளவும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை பட்டை லவங்கம் ஏலக்காய் சோம்பு சேர்த்து வதக்கி வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும் .
பின் அரைத்த தக்காளி விழுது சேர்த்து வதக்கவும் பீட்ரூட் துருவல் சேர்த்து வதக்கி தூள் சேர்த்து வதக்கவும் பின் தயிர் சேர்த்து பிரட்டவும் ஒன்றரை கப் நீர் விட்டு கொதிக்க செய்து அரிசியை சேர்த்து கொதிக்க விட்டு சிறு தீயில் மூடிவைத்து விடவும் முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும்.
இப்போது சுவையான பீட்ரூட் பிரியாணி தயார்