Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருமணமாகி 4 மாதங்களிலேயே…. இளம்பெண் கொடூர கொலை…. வடமாநில வாலிபர் கைது….!!

திருமணமான 4 மாதங்களிலேயே மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த 23ஆம் தேதி ஹரியானாவை சேர்ந்த யோகேஷ் என்ற வாலிபர் இளம்பெண் ஒருவருடன் தங்கியுள்ளார். இதனையடுத்து யோகேஷ் இளம்பெண்ணை அறையில் வைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனை அறிந்த விடுதி ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி விடுதியின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும், அவரது செல்போன் எண்ணை வைத்தும் நடத்திய விசாரணையில் லோகேஷ் மராட்டியத்திற்கு தப்பியோடியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மராட்டிய காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு யோகேஷை மும்பையில் வைத்து கைது செய்துள்ளனர். இதனைதொடர்ந்து காவல் துறையினர் யோகேஷை ராமேஸ்வரம் அழைத்து வருவதற்காக மும்பைக்கு சென்றுள்ளனர். இதற்கிடையே உயிரிழந்த இளம் பெண்ணின் உறவினர்கள் பெண்ணை தேடி ராமேஸ்வரம் வந்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் உயிரிழந்த இளம்பெண் ஹரியானாவை சேர்ந்த ஜோதி என்பது தெரியவந்துள்ளது.

மேலும் யோகேஷ் மற்றும் ஜோதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததும், கணவன்-மனைவி இருவரும் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றதும் விசாரணையில் வெளிவந்துள்ளது. இந்நிலையில் திருமணமான 4 மாதத்தில் மனைவியை கொன்றுவிட்டு தப்பி ஓடிய காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |