அமெரிக்காவில் உட்டா நகரில் தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா இயங்கி வருகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது இந்த பூங்காவில் உள்ள ரோப் காரில் பயணிகள் பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.
இதனால் 167 பயணிகள் நடுவழியில் அந்தரத்தில் தொங்கி தவித்தனர். இதையடுத்து மீட்புக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மீட்பு குழு அவர்களை பத்திரமாக மீட்டனர். இதனை ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.