இந்தியாவின் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து வருகின்ற 3 தேதி முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறார்களுக்கு கோவக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த பிரத்தியேக மையங்களை அமைக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிறார்களுக்கு தடுப்பு ஊசி செலுத்த உள்ளவர்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது என்று கூறப்படுகிறது.