Categories
மாநில செய்திகள்

முதல்வர் போட்ட ஒரு ட்வீட்…. தமிழ்ப்புத்தாண்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி…..!!!

தமிழ் புத்தாண்டு சர்ச்சைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது

தமிழக அரசு சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் பையில் தமிழக புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து பலரும் தமிழ் புத்தாண்டு தேதியை திமுக அரசு மாற்ற முயற்சி செய்கின்றது என்று கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் வெளியாகியுள்ள புதிய ரேஷன் பையில் புத்தாண்டு என்ற வாசகம் நீக்கப்பட்டு தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மண் செழிக்கட்டும், மக்கள் மகிழட்டும், வீடு நிறையட்டும், நாடு சிறக்கட்டும் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |