ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1 கோடியே 50 லட்சம் வரை பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்திற்கு ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் என தாங்கள் விளைவித்த 4,694 பருத்தி மூட்டையை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், சேலம், பல்லடம், ஆத்தூர் என பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் ஆர்.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 8,539 ரூபாயில் இருந்து 10,019 ரூபாய்க்கும், டி.சி.எச் ரக பருத்தி 11,502 ரூபாயில் இருந்து 12,769 ரூபாய்க்கும், கொட்டு ரக பருத்தி 3,850 ரூபாயில் இருந்து 5,525 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. அதன்படி ஏலத்தில் மொத்தம் 1 கோடியே 50 லட்சத்திற்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது.