‘ஜெய் சுல்தான்’ வீடியோ பாடல் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது.
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”சுல்தான்”.
இந்த படத்தின் மூலம் பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா தமிழில் அறிமுகமானார். விவேக் மெர்வின் இசையமைத்த இந்த திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ”ஜெய் சுல்தான்” வீடியோ பாடல் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. அதன்படி, இந்த பாடல் யூடியூபில் 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தலான சாதனை படைத்துள்ளது.
75 Million+ views!
Thanks to all #JaiSulthan Fans 🙏😎#JaiSulthanHits75M #Sulthan @Karthi_Offl @iamRashmika @anirudhofficial @iamviveksiva @MervinJSolomon @Bakkiyaraj_k▶️ https://t.co/sRTLe1Dp8Q pic.twitter.com/yhsxP2qnYR
— DreamWarriorPictures (@DreamWarriorpic) December 27, 2021