சட்ட விரோதமாக வீட்டில் வைத்து சாராயம் விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வீட்டின் பின்புறத்தில் சாராயம் விற்பனை செய்த சாந்தி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 25 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.