Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நடந்த திருமண ஏற்பாடு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள செட்டிப்பாளையம் கிராமத்தில் கலைவாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் மார்க்கெட்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர் கலைவாணிக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இதற்கு கலைவாணி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் கலைவாணி திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலைவாணியின் உடலை உடனடியாக கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |