தீராத வயிற்று வலியால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொற்படாக்குறிச்சி கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அவ்வப்போது குடித்து வந்துள்ளார். அதன்பின் சக்திவேல் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அவர் வயிற்று வலி தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.