Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 26-ஆம் தேதி துரைசாமி ஓட்டலின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இதனையடுத்து துரைசாமி வேலை முடிந்து வந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து மோட்டார் சைக்கிளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் இதுகுறித்து துரைசாமி நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நாசரேத் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மணிநகர் பகுதியில் வசிக்கும் இருதயராஜ் என்பதும், இவர் காணாமல் போன மோட்டார் சைக்கிளை திருடியதும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருதயராஜை கைது செய்ததோடு அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |