Categories
உலக செய்திகள்

தன்னையே விழுங்கிய ராஜ நாகம்….. தந்திரமாக செயல்பட்ட ஓனர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

ராஜநாகம் ஒன்று தன்னைத் தானே விழுங்க தொடங்கியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ராப் கிளார்க் என்பவர் ராஜநாகம் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த ராஜநாகம் தன்னைத்தானே சாப்பிட தொடங்கியுள்ளது. இதனை வீடியோவாக எடுத்த ராப் கிளார்க் ராஜநாகம் தன்னைத்தானே உண்ண தொடங்கிய சம்பவ பதிவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ராப் கிளார்க் கூறியதாவது, ராஜ நாகம் தன்னைத் தானே விழுங்கியதைக் கண்டு முதலில் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். அதன்பின்பு கிளார்க் ராஜநாகத்தின் மீது கை கழுவ பயன்படுத்தும் ஹண்ட் சனிடைசரை தடவியதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த ராஜநாகம் விழுங்கிய உடல் முழுவதையும் வெளியே எடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராப் கிளார்க் பாம்பின் கண்களை பாதுகாக்க செதில்கள் உள்ளதால் ஹண்ட் சனிடைசரால் அதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |