மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ , தமிழகத்தின் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி மிகவும் ராசியானவர் என்றுகூறினார்.
40 ஆண்டுகளுக்கு பின் மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தில் நேற்று முதல் தண்ணீர் நிரப்பும் பணி நடந்தது. அதை கண்காணிக்க கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு சென்றார். அப்பொழுது செய்தியாளர்ககளை சந்தித்த அவர், தமிழகத்தின் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி மிகவும் ராசியானவர். அதன் காரணமாகவே நீரிநிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் அதிமுக அரசு ஜெட் வேகத்தில் எல்லா பணிகளையும் செய்து வருகின்றது. எனவே விலைவாசி உயர்வைகட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரையில் அரசின் தலையீடு இருக்காது. அதை முழுமையாக தேர்தல் ஆணையம் நடத்தும்.
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாக அரசை விமர்சித்து வருகிறார். அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட வெங்காயம் பற்றி கேலி செய்துள்ளார். ஆனால் அந்த வெங்காயம் நல்ல காரத்தன்மையாக இருந்தது. எப்படி சொல்கிறேன் என்றால், அதை நானும், முதல்வரும் சாப்பிட்டு பார்த்தோம்.
தமிழகத்தில்நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தோல்வியை தான் அடையும். அவர்கள் வெற்றி பெறுவோம் என கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. எதிர்க்கட்சியினர் நீதிமன்றத்தை பார்த்துதான் செல்கின்றனர். அவர்கள் நகைச்சுவை அரசியல் செய்து வருகின்றார்கள். நகைச்சுவை அரசியல் செய்யும் ஸ்டாலின் எப்போதும் முதலமைச்சர் பதவிக்கு வர வாய்ப்பில்லை எனக் கூறினார்.