சென்னையில் வரும் 30ஆம் தேதி புதுவருட கொண்டாட்டத்தை முன்னிட்டு பைக் ரேஸ் நடத்த காவல்துறை தடை விதித்துள்ளது.
வருகிற 31-ஆம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் காவல்துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த விதமாக இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா ஆகிய இடங்களில் மக்கள் ஒன்று கூடி புதுவருட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ஓட்டல்கள் தங்கும் வசதி உணவு விடுதிகளில் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் வரும் 30ஆம் தேதி புதுவருட கொண்டாட்டத்தை முன்னிட்டு பைக் ரேஸ் நடத்த காவல்துறை தடை விதித்துள்ளது. அதேபோன்று மெரினா கடற்கரை, போர் நினைவுச்சின்னம் முதல் காந்தி சிலை வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை அதி விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.