அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் மற்றும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்கினுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் தங்கள் நாட்டிற்கு சொந்தமான விண்வெளி நிலையத்தின் மீது மோத வந்ததாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் உலக பணக்காரர்களில் ஒருவராக திகழ்கிறார். மேலும் இவர் இணையதள சேவை உட்பட பல திட்டங்களுக்காக விண்வெளியில் தன்னுடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் பல செயற்கை கோள்களை செலுத்தியுள்ளார்.
இந்நிலையில் சீனா எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ள செயற்கைக்கோள்கள் இருமுறை தங்களது விண்வெளி நிலையத்துக்கு மிக அருகில் மோதுவது போல் வந்ததாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இது தொடர்பாக ஐ.நா சபையில் சீனா புகார் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.