Categories
மாநில செய்திகள்

இன்னும் 2 வாரங்களில்…. வெளியாக போகும் நல்ல செய்தி…. மகிழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள்…!!!!

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று காரணமாக பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இது தொடர்பாக நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்றும், ஜனவரி 3வது வாரத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். அதற்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் பேசிய அவர், ஆசிரியர்களின் பணி இடமாறுதல்,  கவுன்சிலிங் தொடர்பான அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் வரும். அதனைத் தொடர்ந்து இரண்டு வாரங்களில் தொடக்கப்பள்ளிகளுக்கு, பின்னர் உயர் நிலைப் பள்ளிகளுக்கும் கவுன்சிலிங் நடக்கும். இவ்வாறு பணி முடிந்தபிறகு நமக்கு எவ்வளவு ஆசிரியர்கள் தேவை என்பதை பொருத்து ஆசிரியர்களின் பணி நியமனம் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் மாணவர்களின் விகித சராசரித்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் பணியிட மாறுதலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்பதால், ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |