கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்பட உள்ளது.
மேலும் சபரிமலையில் நாளை மறுநாள் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். சபரி மலைக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றது.