தமிழகத்தில் ஜனவரி-3 ஆம் தேதி முதல் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தினை முதல்வர் மு.க ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் பொங்கல் பரிசாக பணம் வழங்கப்படுமா? என்று குழப்பம் ஏற்பட்டு வரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணியிடம், பொங்கல் பரிசு தொகை வழங்கப்படுமா? என்று கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், இது குறித்து ஆலோசித்த முதலமைச்சர் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
இந்த சூழலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், பொங்கல் பண்டிகைக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தமிழகத்தில் நிதி நிலைமை சரிந்து விட்டது. அதிமுக அரசு கஜானாவை காலி செய்து விட்டதாக திமுகவினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மத்திய அரசிடம் பேசி நிதி பெற்று அனைவருக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.